நாகரிக நரிகள்

ஏடீ ! கிளியே ! சிறுபைங் கிளியே !
எப்போ தும்நீ பறந்திடும் தருணம்
அக்கம் பக்கம் அழகைப் பார்த்து
பறப்பாய் கிளியே பக்கத் தினிலே
நயவஞ் சகமாய் இயல்பாய் நகையாய்
பேசிச் சிரித்தே உன்னை மயக்கி
புலனிடை பொதிந்த கற்பெனுந் தீயைத்
தீண்டிட வந்திடும் நாக ரிகத்தீ
நரிகள் இந்த நாடக உலகில்
மிகவும் அதிகம் ஒருசொல் கேளாய்
கிளிஎன் ராலும் பருந்தாய்
உருவே டுக்கும் கலையறி வாயே !

-விவேக்பாரதி
17.07.2015

Comments

Popular Posts