உமை அழகு
அப்பர் சாமி கோவிலில், அம்பாள் தந்த அழகியல்!!
குங்கும வாசக் கோலத்தி லேயவள்
கொலுவி ருக்கு மழகு - ஒரு
குணமு மிலாத மூடனின் நெஞ்சில்
கோயில் கொண்ட தழகு!
எங்குமி ருக்கும் காற்றினில் பாடல்
எழுத வைப்ப தழகு! - அந்த
ஏந்திழை யாளுமை யாள்சிவ காமியை
ஏத்தும் நெஞ்ச மழகு!
நெற்றியில் சந்தனம் மின்னிட வேயவள்
நேரில் நிற்ப தழகு! - என்
நெஞ்செழும் மாயையைப் பஞ்செனத் தீய்த்திடும்
நெருப்பு விழிக ளழகு!
கற்றைச் சடைதனி லம்புலி மீன்கள்
காட்சி தருவ தழகு! - ஒரு
கருப்பு நிறத்தினள் காவிய ஜ்வாலையென்
காளி முகத்தி னழகு!
பக்கவி ளக்கொளி பரவிடக் குறுநகை
பார்த்துச் சிரிப்ப தழகு! - ஒரு
பார்வையி லேமனச் சோர்வைய கற்றிடும்
பாவை யிமைக ளழகு!
தொக்கவ ரும்பிழை தொல்லைம னத்தினைத்
தோற்க டிப்ப தழகு! - தம்பி
தோகை மயில்குகன் வேலி லிருப்பவள்
தோன்றும் தோற்ற மழகு!
காரிரு ளாம்சிவத் தமைதியி லேயவள்
கவிதை படிப்ப தழகு! - நம்
காரிய மாக்கிடும் காரணி யாயிவள்
கடமை செய்வ தழகு!
பேரிகை போலிள நெஞ்சை இசைத்துப்
பேறு தருவ தழகு! - அவள்
பேருரைப் பாயென நெஞ்சையொ லிக்கையில்
பெருகு மின்ப மழகு!
காகம் கரைவதில் கவிதை நிறைவதில்
காட்சி தருவ தழகு! -பெரும்
காலவ னத்தினை ஆண்டுகி டந்திடும்
ககன மனது மழகு!
தாகமெ டுக்குமு யிர்க்கமு தாகிடும்
தண்மை அருளு மழகு! - ஒரு
தாயவள் பேருமை யாளென வேநிதம்
சொல்லிச் சொல்லிப் பழகு!!
-விவேக்பாரதி
08.01.2018
குங்கும வாசக் கோலத்தி லேயவள்
கொலுவி ருக்கு மழகு - ஒரு
குணமு மிலாத மூடனின் நெஞ்சில்
கோயில் கொண்ட தழகு!
எங்குமி ருக்கும் காற்றினில் பாடல்
எழுத வைப்ப தழகு! - அந்த
ஏந்திழை யாளுமை யாள்சிவ காமியை
ஏத்தும் நெஞ்ச மழகு!
நெற்றியில் சந்தனம் மின்னிட வேயவள்
நேரில் நிற்ப தழகு! - என்
நெஞ்செழும் மாயையைப் பஞ்செனத் தீய்த்திடும்
நெருப்பு விழிக ளழகு!
கற்றைச் சடைதனி லம்புலி மீன்கள்
காட்சி தருவ தழகு! - ஒரு
கருப்பு நிறத்தினள் காவிய ஜ்வாலையென்
காளி முகத்தி னழகு!
பக்கவி ளக்கொளி பரவிடக் குறுநகை
பார்த்துச் சிரிப்ப தழகு! - ஒரு
பார்வையி லேமனச் சோர்வைய கற்றிடும்
பாவை யிமைக ளழகு!
தொக்கவ ரும்பிழை தொல்லைம னத்தினைத்
தோற்க டிப்ப தழகு! - தம்பி
தோகை மயில்குகன் வேலி லிருப்பவள்
தோன்றும் தோற்ற மழகு!
காரிரு ளாம்சிவத் தமைதியி லேயவள்
கவிதை படிப்ப தழகு! - நம்
காரிய மாக்கிடும் காரணி யாயிவள்
கடமை செய்வ தழகு!
பேரிகை போலிள நெஞ்சை இசைத்துப்
பேறு தருவ தழகு! - அவள்
பேருரைப் பாயென நெஞ்சையொ லிக்கையில்
பெருகு மின்ப மழகு!
காகம் கரைவதில் கவிதை நிறைவதில்
காட்சி தருவ தழகு! -பெரும்
காலவ னத்தினை ஆண்டுகி டந்திடும்
ககன மனது மழகு!
தாகமெ டுக்குமு யிர்க்கமு தாகிடும்
தண்மை அருளு மழகு! - ஒரு
தாயவள் பேருமை யாளென வேநிதம்
சொல்லிச் சொல்லிப் பழகு!!
-விவேக்பாரதி
08.01.2018
Comments
Post a Comment