சித்திரக்கவி - உருத்திராட்ச பந்தம்
பாடல்:
ஆலவிட முண்டவனே
நீலநிறங் கொண்டவனே
காலனையு தைத்தவனே
பாலனுடற் கட்டறுத்தே!!
பொருள்:
ஆலகால விஷத்தை உண்டவனே! அதனால் கழுத்தில் நீலநிறம் கொண்டவனே! மார்க்கண்டேயன் என்னும் பாலகன் வேண்ட, அவன் மீது விழுந்த எமனின் கட்டை அறுத்து அந்தக் காலனை உதைத்தவனே! என் கட்டையும் அறு (இது மட்டும் கட்டறுத்தே என்பதில் மறைத்துக் கூறப்பட்ட பொருள்.
விதி:
வஞ்சித்துறையின் 4 ஆம் எழுத்தும் 36 ஆம் எழுத்தும் ஒன்றி வருவது உருத்திராட்ச பந்தம் ஆகும். மாலையின் வலப்புற மேல் நுனியிலிருந்து துவங்கி இடப்புறமாக இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.
-விவேக்பாரதி
21.01.2018

Comments
Post a Comment