காற்றும் அமரரும்

காற்றைக் குறித்து நானும் ரெங்கா (Srinivasa Rengan) அண்ணனும் பேசிக் கொண்டு இருக்கையில் உதித்த ஒரு சிலேடை...

மேனி வியப்பினால் மேலே திரிவதால்
வானில் இருப்பதால் வன்மையால் - ஞானத்திற்
கெட்டா திருப்பதால் கேளாய் அமரர்கள்
மொட்டவிழ்க்கும் காற்றுக்கு நேர்!!

காற்று :

மேனியை வருடி வியக்க வைக்கும்
மேலே திரியும்
வானில் இருக்கும்
பலம் கொண்டது
ஞானத்திற்கு எட்டாத வினைகள் செய்யும்..

அமரர் :

வியப்பான மேனி உடையவர்கள்
மேலே திரிவார்கள்
வானில் இருப்பார்கள்
பலம் கொண்டவர்கள்
ஞானத்திற்கு எட்டாத உலகில் வசிப்பவர்கள்...

-விவேக்பாரதி
01.01.2018

Comments

Popular Posts