குடிகளுக்கு விண்ணப்பம்
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
சேதமற்ற ஹிந்துஸ்தானம் சேரக் கேட்கிறேன் - அதன்
செழுமை வளமை யாவுமிங்கு நேரக் கேட்கிறேன்!
நீதிநிற்க நேர்மைநிற்க வேண்டு மென்கிறேன் - மண்ணில்
நித்தநித்த மமைதிப்பூக்கள் பூக்கக் கேட்கிறேன்!
பாதகத்தை நீங்குகின்ற பதங்கள் கேட்கிறேன் - இந்த
பாரதத்தில் ஒற்றுமைக்குப் பாலம் கேட்கிறேன்
காதினுக்குள் அல்லதங்கள் மனதில் கேட்கிறேன் - எனைக்
காணும்! இன்றுதான் பிறந்த சட்டக் குழந்தையே!
லஞ்சமென்னும் நஞ்சையூற்றி நேர்மைப் பயிர்தனை
லட்சியத்தை அழித்துவிடில் உயர்வு நேருமோ?
பஞ்சமொற்றைப் பக்கம்வாழப் பளிங்கு மாளிகை - வேறு
பக்கமோங்கப் பார்த்திருக்கும் செய்கை நியாயமா?
நெஞ்சமென்னும் ஒன்றிலாசை நிறைய சேரவே - ஒரு
நேரம்கூட ஓய்ந்திடாமல் ஓடித் திரிகிறீர்
கொஞ்ச மிடையில் சிந்தனைக்குள் எண்ணிப் பாருங்கள் - இதைக்
கோருகின்ற குரலுமுங்கள் சட்டக் குழந்தையே!
ஓரினத்தை ஒருமதத்தை மட்டும் தாக்குதல் - கடமை
ஓட்டுக்காகக் காசுவாங்கி உரிமை நீக்குதல்
காரியத்தில் யாவினுக்கும் சோம்பல் பார்ப்பது - இந்தக்
கடவுள் ஜாதி மதத்தின் பேரில் சண்டை போடுதல்
மாரிநேர வழியிலாமல் காட ழிப்பது - என்னும்
மாற்றிலாத குற்றம்செய்தல் நீங்கக் கேட்கிறேன்!
யாரென வியந்த நோக்கில் என்னைப் பார்க்கிறீர் - நான்
யாவருக்கும் உரிமையான சட்டக் குழந்தையே!
முடியினாட்சி நின்றபோது பொறுமை நின்றது - இந்த
மண்ணிலெங்கும் நேர்மையெண்ணம் நிலைத்தி ருந்தது
அடிமையாட்சி வந்தபோதில் அதையெதிர்த்திட - மக்கள்
அமைதியாக ஒன்றிணைந்த புகழி ருந்தது
குடியினாட்சி குவலயத்தில் வந்து சேர்ந்துமே - புகழ்க்
குன்றிலேறும் காலம்மட்டும் ஏன்வ ரவில்லை?
மிடிமைதீர முன்னவர்கள் செய்து வைத்தவன் - பொருள்
மீண்டுமறிய கேட்பதிந்தச் சட்டக் குழந்தையே!
மக்கள்முன்னம் விண்ணப்பத்தை நானும் வைக்கிறேன் - இதன்
மறுபதிலுக் கேங்கிநானும் தவமி ருக்கிறேன்!
சிக்கலற்று நாடுவாழ விடைகள் கேட்கிறேன் - மண்ணில்
சீர்மைபெற்று வாழவேண்டி நானும் கேட்கிறேன்!
அக்கறைகள் கொண்டதாலே கேட்டு நிற்கிறேன் - என்
ஐயம்நீங்க அச்சம்நீங்க சிந்தை செய்யுங்கள்
மக்களன்றி நாடுமேது மாண்பு களேது? - உம்
மனதிலொற்றை மாற்றம்நேர மகிமை நேருமே!!
-விவேக்பாரதி
26.01.2018

Comments
Post a Comment