நாணல்

காற்றிலே அசைபவன் !
கரும்பாகவும் வளர்பவன் !
சேற்றிலே வெண்மலர்
சேர்ந்திட ஜொலிப்பவன் !
ஆற்றிலே, கரையிலே,
அழகாக வளர்பவன் !
நாற்றமே அற்றவன் !
நான் வலிமை மிக்கவன் !

புல்லென இருப்பவன் !
புதுப்பனை ஆனவன் !
நெல்லினுக் கருகிலே
நெளிகின்ற ஓரினம் !
பல்லெழில் மலையையும்
பனித்துளியில் காட்டினேன் !
வல்லவன் ! புயலிலும்
வளைந்து திரும்புவேன் !

கோணல் கண்ட போதும் - நான்
கோழை ஆகா "நாணல்"

-விவேக்பாரதி
05.07.2017

Popular Posts