காளி பஞ்சகம்

(கன்னட யாப்பு முறை "ஷட்பதி" என்பதைத் தமிழில் "ஆறடி" என்று முனைந்தது ! )

தாருக னென்னும ரக்கன ழிந்திடக்
கோரிய வானவ ரீசனை நாடிட
வாரிய வன்கழுத் தேந்திய தீவிட மள்ளியெ டுத்தனளே !
பேரிடி யாய்ப்பல மின்னல்க ளாய்ப்பெரு
வாரிதி யில்வரு மோர்புய லாகவுன்
சீரிய சோதிது ளிர்ந்திட நின்றனைச் சக்திப டைத்தனளே !

ஏவிய ஆணையெ டுத்துமு டித்திடத்
தாவிய வன்சிரம் கொன்றுகு வித்தழல்
மேவிய வானுறு சூரிய னாய்ச்சின மேந்தியி ருந்தனையே !
கூவிடு மென்சிறு கூச்சலைக் கேட்டிடு
தேவி!ய ருட்கணை பாய்ச்சிடு காத்திடு
நாவிலி ருந்தெனை நாளுமி யக்கிடும் காளிம னோன்மனியே !

தாயென நின்னைவ ணங்கிடு மென்றனை
மேயவ ரும்பிழை ஆணவம் தீவினை
நோயெனு மோகம னைத்தும ழித்தென துள்ளமொ ளிர்ப்பவளே !
மாயம னத்திடை அச்சம கற்றிடு
சாயம ழித்திடு மாண்மைய ளித்திடு
காயழ லேந்திடு வோனவன் காதலீ ! தந்தும கிழ்த்துவையே !

மகிழ்வுற மண்வளி விண்தழல் நீரினை
முகிழ்ந்திடு பூவினை முத்தினை எங்கணும்
திகழ்ந்திடு முன்றனைப் பாடிடு மோர்திறன் தன்னைய ளிப்பவளே !
யுகயுக மாய்மன மாடிடும் செய்கையை
அகமிருந் திங்கும டக்கிய டக்கிடு
தகதக வென்றொளி மின்னிடக் கூத்துக ளாடிக ளிப்பவளே !

களிவர ! நின்றுக னனன்றிடு நெஞ்சிடை
ஒளிவர ! மின்னலைக் கையில்பி டித்திடுந்
தெளிவுற ! சிந்தனை உண்மைய றிந்திட ஒளிதனை நல்குவையே !
வளியொடும் வானொடு மண்டநி லத்தொடும்
துளியொடுஞ் சின்னது ரும்பொடும் தூணொடு
முளமெனு மொன்றொடு மென்றுமி ருந்திடு மோர்துணை ஆகிவிடே !

-விவேக்பாரதி
17.06.2017

Popular Posts