சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
சந்தவசந்தம் குழுமத்தில் பாரதியாரின் நூற்றாண்டு நினைவை ஒட்டி நடத்தப்பட்ட கவியரங்கில் படைத்த கவிதை...
சொல்லக் கொதிக்குதடா - மனம்
சோர்வினில் வீழுதடா - கரம்
கொல்லத் துடிக்குதடா - நெஞ்சில்
கோபத்தீ மூளுதடா!
சோர்வினில் வீழுதடா - கரம்
கொல்லத் துடிக்குதடா - நெஞ்சில்
கோபத்தீ மூளுதடா!
சின்னஞ் சிறுவர்களை - ஒரு
சித்திரம் நேருடலை - எழில்
மின்மினிப் பூச்சிகளை - ஒளிர்
மின்னலின் கீற்றுகளை
பிஞ்சுப் பசுமைகளை - மண்ணில்
பிறை மதியங்களை - இறை
கொஞ்சும் மனதுகளை - பயம்
கொள்ளாத கன்றுகளை
பிறை மதியங்களை - இறை
கொஞ்சும் மனதுகளை - பயம்
கொள்ளாத கன்றுகளை
காமத்தின் ஆசையினால் - வெறும்
காயத்தின் இச்சையினால் - ஒரு
மாமிசம்போல் சுவைக்கும் - கெட்ட
மனித மிருகங்களை
காயத்தின் இச்சையினால் - ஒரு
மாமிசம்போல் சுவைக்கும் - கெட்ட
மனித மிருகங்களை
சொல்லக் கொதிக்குதடா - கரம்
கொல்லத் துடிக்குதடா!
கொல்லத் துடிக்குதடா!
வேலி இடத்திலுளான் - பயிர்
மேயும் கதைபடித்தோம் - தாய்க்குத்
தாலி கொடுத்தவனே - மகள்
தன்னைத் தொடுதல்கேட்டோம்
மேயும் கதைபடித்தோம் - தாய்க்குத்
தாலி கொடுத்தவனே - மகள்
தன்னைத் தொடுதல்கேட்டோம்
பக்கத் திருப்பவரே - வீட்டுப்
பாவை விளக்கணைக்க - அவள்
துக்கத்தில் மூச்சுவிட - எனத்
துயர்களை நேரில்கண்டோம்
பாவை விளக்கணைக்க - அவள்
துக்கத்தில் மூச்சுவிட - எனத்
துயர்களை நேரில்கண்டோம்
இத்தகு பாவிகளை - உள்ளில்
இரக்கமில்லாதவரை - வெறும்
செத்தைக் குணத்தரவைத் - தினம்
செய்திகளின் வழியே
இரக்கமில்லாதவரை - வெறும்
செத்தைக் குணத்தரவைத் - தினம்
செய்திகளின் வழியே
சொல்லக் கொதிக்குதடா - கரம்
கொல்லத் துடிக்குதடா!
கொல்லத் துடிக்குதடா!
பெண்மையைத் தெய்வமென - தினமும்
பேச்சுகள் பேசுகிறோம் - எனில்
உண்மையில் உள்மனதில் - வளரும்
உறுத்தல் தணிப்பதில்லை
மோகத்தைக் கொல்வதில்லை - அதனால்
முற்றும் செயல்மறந்து - பெண்கள்
தேகத்தை நச்சுகிறோம் - அதனால்
தேசு மழுங்குகிறோம்!
பசியில் துடிப்பவனாய் - சிலபேர்
பார்த்ததெல்லாம் சுவைப்பார் - அதில்
ருசிகள் பழகிவிட்டால் - அம்மம்மா
சுவைகள் விரும்புகிறார்
இன்பம் நமக்கெனினும் - பிறர்க்கு
இம்சை வளருமெனில் - அந்தத்
துன்பச் செயல்விடுப்போம் - அதில்
தூய ஒளிபிறக்கும்
கண்ணை உணர்ச்சியெனும் - பெரும்
காட்டுத் திரைமறைத்தால் - இறை
உண்மை பிறகொருநாள் - பதில்
உரக்கக் கேட்டுநிற்கும்
வன்மைச் செயல்விடுப்போம் - பிறர்
வாழக் கரம்கொடுப்போம் - இது
மென்மை திகழுலகம் - மன
மேன்மை இதில்வெல்லுமே!!
-விவேக்பாரதி
15.10.2021
Comments
Post a Comment