வா.பிக்கும் வா.முவுக்கும் இடையில்...
வாட்சாப் நின்றுபோன
வாழ்க்கையின் சில கணங்களில்
வந்துவந்து கதவு தட்டும்
குட்நைட் மெசேஜ்களில் இருந்து
கொஞ்சம் ஜாமீன் கிடைத்து!
வாட்சாப் பல்கலைக்கழக வாத்தியார்கள்
அடித்துத் தள்ளிய ஆய்வுக் கோவைகளை
சீ மோர் அழுத்தியே பார்க்க நேர்ந்த
அவலம் குறைந்திருந்தது!
அடித்துத் தள்ளிய ஆய்வுக் கோவைகளை
சீ மோர் அழுத்தியே பார்க்க நேர்ந்த
அவலம் குறைந்திருந்தது!
ஸ்டேட்ஸ் பார்த்தே
ஜென்மம் தீரும் கண்கள்
வட்ட நிலா காண
வானம் பார்த்தன!
சூப்பர் மார்க்கெட் சூதுபோல்
தேவையே இல்லாத
பேஸ்புக் வீடியோக்களை
தள்ளித் தேய்ந்த விரல்கள்
நெட்டி ஒடிந்து
நிம்மதி கண்டன!
ஆன்லைனுக்கு அட்டண்டன்ஸ் வைத்து
இன்ஸ்டாவில் நடந்த இம்சைகளும்
டேக் எனும் கொடிய
நோட்டிபிகேஷன் அரக்கனின்
தொல்லையற்ற இரவுமாய்
ஔவை சொன்ன ஏகாந்தம்
அரைவாசி கிடைத்ததுபோல் இருந்தது...
ஆனால்...
அலுவலக அறிவிப்புகள்,
அம்மாவிடமிருந்து குறுஞ்செய்தி,
அவசர கால ஆலோசனைகள்,
எப்போ வரும் எப்போ வரும் என்று
ஏக்கமும் பிறந்து இம்சித்தன!
சிப்பி அறியாத ஒரு
முத்து தருணத்தில்
வந்து விழுந்த தூசித் துகள்போல்
கண் மலர்ந்த சமயத்தில்
பொத்தென வீழ்ந்திருக்கிறது
முதல் மெசேஜாய்
ஒரு குட்நைட்,
கூடவே கொஞ்சம் பட்டாம்பூச்சிகள்!!
-விவேக்பாரதி
05.10.2021
ஒன்றில் இன்பமும் துன்பமும் உண்டு. அதற்கு அடிமையாகிவிட்டால் துன்பம். அவசியத் தேவைகளுக்கேற்ப பயன்படுத்த இன்பம்.
ReplyDeleteஅருமை கவியே!