அதிகாலையிலே ஒரு மூலையிலே
அதிகாலையிலே ஒரு மூலையிலே எனது
அம்பிகை சிரிக்கிறாள்!
குதிகால் பதியப் பதிதேவருடன் எழில்
பவனியும் வருகிறாள்!
அம்பிகை சிரிக்கிறாள்!
குதிகால் பதியப் பதிதேவருடன் எழில்
பவனியும் வருகிறாள்!
சீதநிலா நுதல் மின்னிடவே கொஞ்சிச்
சிரித்து வருகி்றாள்
ஏதிலியாம் எனைக் காதலிக்க அடி
எடுத்து வருகிறாள்!
சிரித்து வருகி்றாள்
ஏதிலியாம் எனைக் காதலிக்க அடி
எடுத்து வருகிறாள்!
ஓர்கணத்தில் அவள் சிறுமழலை மற்றும்
மோர்கணம் முதுக்கிழவி
போர்குணத்தில் அவள் காளியென்பார் மனப்
பொறுமையிற் பார்வதி!
மோர்கணம் முதுக்கிழவி
போர்குணத்தில் அவள் காளியென்பார் மனப்
பொறுமையிற் பார்வதி!
வேர்கணக்காய்த் தாங்கி வேதனை நீக்கிடும்
வேத சொரூபிணி!
யார்கருத்தால் எனை நோக்கிவந்தாள் இந்த
யவ்வனப் பைங்கிளி?
வேத சொரூபிணி!
யார்கருத்தால் எனை நோக்கிவந்தாள் இந்த
யவ்வனப் பைங்கிளி?
காட்சியிலே துர்கை ஆட்சியிலே சக்தி
கல்வியில் பாரதி!
சாட்சியிலே திரு சண்டையில் காளி
சரி!யவள் ஆதிசக்தி!
கல்வியில் பாரதி!
சாட்சியிலே திரு சண்டையில் காளி
சரி!யவள் ஆதிசக்தி!
தேர்ச்சியில் நம்மை விடுத்திடும் தேவதை
தேவைக் கருளும்நிதி!
ஆச்சர்ய மான கவிதைநதி! இவள்
ஆள்வ துயிரின்விதி!!
தேவைக் கருளும்நிதி!
ஆச்சர்ய மான கவிதைநதி! இவள்
ஆள்வ துயிரின்விதி!!
-விவேக்பாரதி
29.05.2018
29.05.2018
Comments
Post a Comment