மதுரையில் சிவனுக்கு ஏன் சொக்கன் என்று பெயர்?


தேர்தல் திருவிழா ஜோர் ஓய்ந்ததோடு, சித்திரைத் திருவிழா தரிசனமும் சிறப்பாக நடந்தது. மதுரையின் அரசியாய்ப் பட்டாபிஷேகம் செய்துகொண்ட மீனாட்சி, இரவில் நான்கு மாட வீதிகளிலும் பரிவாரம் சூழப் பவனி வந்தாள். கூடிய கூட்டமும், கொட்டிய மேளமும், வீசிய அகில் மணமும், விசிறிய பனை விசிறிகளும், பரவசத்தில் ஆடிய பக்தர்களும், தெய்வங்களாக நிஜ அடையாளம் உடுத்திக்கொண்ட குழந்தைகளும் சூழ, செங்கோல் கையளாய்ச் சிம்மாசனத்தில் அமர்ந்து வந்தாள் மீனாட்சி. அந்த ஒரு கணத்தில் பொருள் பெறப் பாடும் புலவன் ஆனேன். அருள் வேண்டி இப்படிப் பாடினேன்! 

சிம்மா சனமமர்ந்து செங்கோல் கரமேந்தும்
அம்மா!மீ னாட்சீ அழகடிநீ - பெம்மான்,தன்
முக்கண்ணால் கண்டுகண்டு முப்போதும் சொக்கியதால்
சொக்கனெனும் பேராமோ சொல்! 

விவேக்பாரதி
19.04.2024
இரவு 10.40

Comments

Popular Posts