கருநிறக் கூந்தலும் மருளும் கண்களும்


பாலாடைக் கட்டியடி – உன்னுடல் 
    பஞ்சணை மெத்தையடி 
நூலாடை மூடிடினும் – நீயொரு 
    நெய்ரவைப் பொங்கலடி

கருநிறக் கூந்தலடி – அவைபுது 
    கார்த்திகை வானமடி 
மருகிடும் கண்களடி – அவையந்த 
    வானத்து மீன்களடி 

ஆடைகள் மேகமடி – நீயொரு 
    அற்புத பானமடி 
ஜாடைகள் வேதமடி – உனக்குள
    சாயல்கள் தெய்வமடி

புன்னகை முத்துகளாம் – இதழதை  
    புதுக்கிடும் சிப்பியடி 
மென்னகை ஒன்றிருந்தால் – பிறகெந்த 
    மேன்மையும் தேவையில்லை 

பார்வை படும்தொலைவில் – விரல்கள் 
    பட்டிடும் தூரத்தில்நாம் 
சேர்ந்திருந்தால் போதும் – அதிலென் 
    ஜீவன் அடங்குமடி!!

அன்பு நண்பர் ஷ்யாம் சங்கரின் ஓவியத்துக்கு நன்றி. 

#மௌனமடி நீயெனக்கு

-விவேக்பாரதி
11.12.2021

Comments

Popular Posts