கதிரவக் கல்யாணம்


ஓடிப் பேருக்கெடுத்து வருவீரே - அங்கு
ஆடித் தொழில்கள் செய்யும் தோழியரே - எங்கும்
பாடிப் பறக்கும் பறவைகளே - இங்குக்
கூடி நின்று இதனைக் காண்பீரே!

கூலி வேலை செய்யும் தோழர்களே - இங்குக்
கெலித் திருமணம் ஒன்று நடக்குதாம் - சங்கு
முழங்கிட பூமியே சாத்திரமாம் - நொங்கு
மரம் வளர் வானமே மனவரையாம்!

வீரம் கம்பீரம் நிறையப் பெற்ற - செங்
கதிர் சூழ் கதிரவனே மாப்பிளையாம்!
காதல் மனம் தவழும் அமுதவளாம் - வெண்
கதிர் வாழ் சந்திரனே மனப் பெண்ணாம்!

தடாகங்கள் நிரப்பும்
தேன் அல்லிகளே பெண் வீட்டாரம்!
பாயும் அருவிகளே
பிள்ளை வீட்டாராம் !
பறக்கும் குருவிகள்
மாப்பிள்ளைத் தோழர்களாம்!

காலை மலர்ந்தவுடன் திருமணமாம்
நறுமாணமாம்
சுவையினில் பகலுணவு
பாலைவானச் சோலையிலாம்
மாலையில் நலுங்கிட்டு முடித்தவுடனே - அந்த
தம்பதிகளுக்கு அழகான முதலிரவாம்!

விரிக் கடலே பஞ்சு மெத்தையாம்
முகிலே தலையனையாம்
வானவில் போர்வையை
விடுக் கென்று போர்த்தியது தான் !

கொள்ளைக் காதலில் இருவரும்
கொள்ளை போக!-மறுநாள்
கதிரவன் விடிய மறந்தது ஏன்?
இனிய பாரத தேசமே!

-விவேக்பாரதி
25.05.2013

Comments

Popular Posts