காதல் குற்றம்?


பசுமை நிறைந்த
தென்னந் தோப்பினிலே !
செம்மைக் கதிரவன் மறையும்
பொன் வேளையிலே!

காதல் மனம்
தழுவியதொரு காதலனும்,
அன்புக் காதலியும்,
கொஞ்சிக் குலவிக் கொண்டு
இதளோடு இதழ் இட்டு
நாணத்தால் தாழிட்டு !
சூரியரும் கண்டு மோக நிலை கொள்ளப்
புதருக்குள் புதிர் போட்டு
புது விளையாட்டு விளையாட!

அத்தனையும் கண்ட
ஒரு தோட்டத்துக் காவலனும்
சென்றந்த விஷயத்தை ஜமீனிடம்
சொல்லிவிட.,

ஜமீணும் பெண் பெற்றோரை
அழைத்து வரச் செய்து,

"உம் பெண் இன்று இங்கு
பெருந்தவறு இழைத்து விட்டாள் !
உயர் ஜாதி வழக்கத்தையும்
மீறினாள் இன்று அவள் !
கீழ் ஜாதி ஆணையும்
மனத்தினில் தான்
நினைத்து விட்டாள் !!
இப்பெருங் குற்றத்திற்குப்
 பதில் நீரே சொல்லுமையா"
என்று பேசி முடிக்க,

பெற்றோரும் மறுபேச்சு
பேசாது இருந்திடக்
கனவு கலைகிறது !

பாரதியின் கனவு தன்னை
அறிந்த பாரதமே
இப் பச்சைக் கிளிகள் செயல்
பவமோ பதில் சொல்வாயே?

-விவேக்பாரதி
25.05.2013

Comments

Popular Posts