Skip to main content

Posts

Featured

நியூயார்க் பை நைட்

அமெரிக்காவின் இரவு வாழ்க்கையை நியூயார்க்கில் ரசிக்க வேண்டும். வான் முட்ட வளர்ந்து நிற்கும் கட்டடங்களையும், பரபரப்பான மனிதர்களையும் பார்ப்பதே புதுப் பரவசம்.  நியூ ஜெர்சி வழியாகக் காரில் நியூயார்க்கிற்குப் பயணித்தால், வழியில் ஹட்சன் நதி வரவேற்கிறது. அதன் கரையோரம் சிறிது நடந்து சென்றபடியே எதிரில் ஒருபுறம் Empire state மாளிகை, மற்றொருபுரம் Freedom tower இரண்டும் ஒளியூட்டப்பட்டுக் கவர்ந்திழுக்கக் கண்டோம். 2001-ல் இரட்டைக் கோபுரங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அவற்றை முழுவதும் இடித்துவிட்டுக் கட்டியிருப்பதே Freedom tower. அதைப் பற்றிச் சொல்ல அங்கே ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. அப்படியே Up town, Mid town, Down town என்று நியூயார்க் நகரின் கீழ, மேல வீதிகளில் உலாவந்து இரவைக் களி(ழி)த்தோம்.  எங்கள் பாரதி யார்? நாடகக் குழுவைக், கவிமாமணி இலந்தை சு இராமசாமி அவர்களின் மகள் கவிதாவும், அவரது கணவர் பாலாஜியும் அழைத்துச் சென்றனர். அவர்கள் வீட்டில் பரிமாறப்பட்ட மெக்சிகன், இத்தாலியன், வட இந்திய உணவுகளின் சங்கமத்தை வயிறு புடைக்க வெட்டிவிட்டு, கழுத்தளவுச் சாப்பாட்டுடன் இரவுலாவுக்குப் பு

Latest Posts

மாயமாய்ப் போன மணி நேரம்

ஜெட்லாக் என்னும் மாயநிலை

உட்கார்ந்தே இருக்கும் மனிதன்

கண்ணதாசக் கவி வாழி

மரங்களை அர்ச்சிக்கும் கவிதைகள்

வடபழநி வசந்தம்