யாருக்காக கூவுகிறாய்??
யாருக்காக கூவுகிறாய்
ஆண்மயிலே
உன் தனிமையிலே!
உன் தனிமையிலே!
தேனுக்காக ஏங்கி ஏங்கி
தேடு கின்ற வண்டுபோல்
மானுக்காக மருண்டு கொண்டே
மண்ணில் வாழும் புல்லைப்போல்
நானும் இங்கே அவளைத் தேடி
நாட்கள் தீய வீழ்கிறேன்
ஏனோ வந்தேன் ஏனோ செல்வேன்
ஏக்கத்தோடு வாழ்கிறேன்
தேடு கின்ற வண்டுபோல்
மானுக்காக மருண்டு கொண்டே
மண்ணில் வாழும் புல்லைப்போல்
நானும் இங்கே அவளைத் தேடி
நாட்கள் தீய வீழ்கிறேன்
ஏனோ வந்தேன் ஏனோ செல்வேன்
ஏக்கத்தோடு வாழ்கிறேன்
மாலை நேரம் ஆக ஆக
மனதுக் குள்ளே போர்க்களம்
காலை வைக்கும் வெளியில் எங்கும்
காற்றில் உன்றன் பேர்வரும்
ஆளைத் தேடி அலையும் நெஞ்சம்
அடங்கும் நாளைக் கேட்கிறேன்
வேளை எல்லாம் பாடிப் பாடி
வேதனைகள் தீர்க்கிறேன்!
மனதுக் குள்ளே போர்க்களம்
காலை வைக்கும் வெளியில் எங்கும்
காற்றில் உன்றன் பேர்வரும்
ஆளைத் தேடி அலையும் நெஞ்சம்
அடங்கும் நாளைக் கேட்கிறேன்
வேளை எல்லாம் பாடிப் பாடி
வேதனைகள் தீர்க்கிறேன்!
நெஞ்சம் தாண்டி வழியும் கண்ணீர்
நெறுக்கி வைக்கப் பார்க்கிறேன்
பஞ்சைப் போலே திரிந்த கனவு
பாதுகாத்து வைக்கிறேன்
அஞ்சுகத்தின் குரலைக் கேட்க
ஆவி வீங்கிக் கிடக்கிறேன்
கொஞ்ச மில்லை என்றன் சோகம்
கொஞ்சம் பாடி வைக்கிறேன்!!
நெறுக்கி வைக்கப் பார்க்கிறேன்
பஞ்சைப் போலே திரிந்த கனவு
பாதுகாத்து வைக்கிறேன்
அஞ்சுகத்தின் குரலைக் கேட்க
ஆவி வீங்கிக் கிடக்கிறேன்
கொஞ்ச மில்லை என்றன் சோகம்
கொஞ்சம் பாடி வைக்கிறேன்!!
–விவேக்பாரதி
21.04.2021
21.04.2021
Comments
Post a Comment