மிறைப்பா வகைகள்

தமிழ் மொழியில் உள்ள ஓர் அரிய அழகு யாப்ப்பிலக்கணமும்,  அணியிலக்கணமும்.அவற்றுள் நாம் வியக்கத்ததாக இன்றளவும் உயர்ந்து நிற்பன அணி இலக்கணம் சொல்லக்கூடிய சித்திரக் கவிதைகளும் மிறைப்பா வகைகளும் தான். பாடலின் அமைப்பு, உள்ளே கூறப்படும் கருத்தின் அமைதி இவற்றின் அடிப்படையில் பலவகையான சித்திர, மிறைக்கவிகள் இருக்கின்றன. சந்தவசந்தம் கவிதைக் குழுமத்தின் வெளியீடான “கவிதையில் சித்திர விசித்திரங்கள்” என்னும் நூல் இதனை இன்னும் தெளிவாக ஆய்வு செய்து ஓர் சுவையுள்ள இணையக் கவியரங்கமும் நடத்தி அதன் தொகுப்பாக இணையத்தில் அமேசான் தளத்தில் மின் புத்தகமாகவும் உலா வருகின்றது. அதன் அடிப்படையில் அந்தக் கவியரங்கப் பயிற்சிகளின் போது எழுதிய பாடல்கள் சில

பிந்துமதி வெண்பா,

சொல்லத்தான் சித்தத்தில் சொக்கட்டான் துள்ளும்!மின்
மெல்லத்தான் தொட்டென்னுள் முட்டுங்காண் - வெல்லத்தான்
புல்நெஞ்சில் சந்தங்கள் பூக்கும்பின் பாட்டுக்கள்
வில்லம்பைப் போல்விஞ்சும் விண்டு!

இதழகலி,

நீயென்றால் நீயல்ல நானென்றால் நானல்ல
தீயென்றால் சாடுகின்ற தீயல்ல - தேயந்தான்
சாதலைக் கண்டாலுஞ் சாதலல்ல! இஃதெல்லாங்
காதலதன் செய்கையெனக் காண்!

கடைமொழி மாற்று

மயிலும் அலறிடும் ஆந்தை பகலிற்
துயிலாது கூவும்! மிகவும் - ஒயிலாய்க்
குயில்கீச் சுங்குருவி பேசும்! வெயிலில்
பயிலாக் கிளியக வும்!

Comments

Popular Posts