முத்தச் சிவப்பு


எதுகை போன்ற 
இதழ்கள் சேர 
மோனை மூக்கு 
முனையில் உரச
சீராய்க் கண்கள் 
சிக்கிக் கிடக்க 
தளைபோல் மூச்சு
பிணைந்து மயக்க 
மெத்தைக் காகித
மேலே கூடி 
ஆணொரு பேனா 
பெண்ணொரு பேனா 
சேர்ந்தெழுதும் கவிதை 
சிவக்க வைக்கும் முத்தம்!!

விவேக்பாரதி
24.04.2014

Comments

Popular Posts