நறுந்தொகை | ஊடல் தீர்க்கும் சுகம்



திணை - குறிஞ்சி
துறை - தலைவர்கள் ஊடல் தீர்ந்து சுகித்தல் 

நிலவுறும் இரவில் நிகழ்தனிப் பொழுதில்
கலவரச் சண்டை கடுகி நிகழ்த்தி
அவன்றனை நானும் என்றனை அவனும்
எவரோ போல ஏசிக் கத்தி
சரிதவறு என்னும் தர்க்கம் மறந்து
எரிந்ததற்காக எரிந்து விழுந்து
படுக்கை போந்து முதுகுகள் நடுவில்
தடுக்கைத் தலையணை பிரிக்க வெம்பி
மூச்சிடல் மறந்த மூக்கைப் போலப்
பேச்சில்லாமை பெரிதும் வெறுத்து
அவன்றோள் வேண்டித் திரும்பத்
தழுவினன் என்போல் தவமுளன் உண்டோ?!!

-விவேக்பாரதி

_*_

Thinai - Mountain and mountain based land
Thurai - Heroes pacify after a fight 

In the moon’s light
Not so lovely night 
We hit each other 
As if we were complete strangers
Belonging to neighborhood countries 
Meeting in the middle of a conflict
The space between us in the bed
That wasnt there the other night
Was filled with a plush pillow
More like a nostril that forgot breathing
The silence between us, weighed high
My love for him won over the hatred
And I finally turned to his side
As soon as I did
He broke into tight hugs and lovely cuddles
See, is there anyone as lucky as myself?

-Flaws in Flowers 

Comments

Popular Posts