நினைவில் நா.மு



அவசரத்தில் பாட்டுகளைக் கோத்தவர்கள் 
    மத்தியிலே அரிய தான 
கவிசரத்தை ஏந்தியந்த அவசரத்தில் 
    பாய்ச்சியவா! கனிந்த உன்றன் 
தவசிரத்தை அனுபவங்கள் சித்தாந்தம் 
    அத்தனையும் தமிழில் கோத்த 
செவிசுரத்துத் தேனறே நாமுத்து! 
    வாழ்வாய்நீ தமிழரோடே!

தேமுத்துச் சொல்லெடுத்து தீந்தமிழில் 
    கற்பனையைத் திகழச் சேர்த்து 
வாய்முத்தாய் நீயுதிர்த்த பாட்டுகளை 
    ஊர்பாடும் வாஞ்சை யோடு
சேமித்து வைத்ததெல்லாம் தந்துவிட்டு 
    போதுமெனச் சேர்ந்தாய் விண்ணை 
நாமுத்துக் குமாருன்றன் நாமுத்துச் 
    சொல்வாழும் நாட்டினோடே!!

-விவேக்பாரதி 
14.08.2021

Comments

Popular Posts