ரத பந்தம் - வடமே பிடிக்கநீ வா

கவிஞர் சுந்தராவின் ஒரு தேர் பந்தத்தைப் படமாக்கியபின் எனக்கும் ஒன்று எழுதத் தோன்றியது. பைந்தமிழ்ச் சோலையின் ஆண்டுவிழாவை இணைய நேரலை வழியே முடித்தபின் கொஞ்சம் தூக்கம் வராமல் (அந்த களிப்பான நினைவில்) இருந்தபோது மனத்தில் தேரிட்டு எழுதி, காலையில் தேருக்குள் பொருத்தி நிறைவு செய்த பாடல்.




பாடல்:

நோவாத வாறுநீ நோன்புகள் காத்தெமக்
கேவாழ்வு தந்திடி லேதுவே - மூவா
நடைபிடி நாதா நலமேதே ரிட்டவ்
வடமே பிடிக்கநீ வா!

பொருள்:

நாங்கள் செய்யக்கூடிய நோன்புகளை எல்லாம் காத்து, நாங்கள் நோகாதவாறு செய்து, எங்களுக்கு வாழ்வு தர உன்னால் முடியுமே! இளமை மாறாத நடையினை என்றும் பிடித்திருக்கும் அனுமந்த நாதா, எங்களை நலம் என்னும் தேரினில் இட்டு, அந்த வடத்தைப் பிடித்து நீயே உருட்டி மகிழ்வதற்கு வா!

-விவேக்பாரதி

Comments

Popular Posts