ஐம்புலப் பஞ்சகம்



(சந்தவசந்தம் கூகுள் குழுமத்தில் கவிஞர்கள் இணைந்து படைத்த கலித்துறைப் பாடல்கள்)

தேக மெடுத்ததன் தேவைய றிந்ததில் தேராமல் 
வேக நடப்புடை வாழ்வுத டத்தினில் வேரின்றி 
போகம் விரும்பியே போதுதொ லைத்திடல் போய்வீழத்  
தாக மெடுத்திடு தாவியு ழைத்திடு தாழாதே! 

*
உள்ளத் துள்ள உண்மையை நேரில் உரைப்பதுவாய்
விள்ளும் சொல்லின் மேன்மைய றிந்து விதைப்பதுவாய் 
எள்ளல் தூற்றல் ஏச்சுகள் தீர்க்கும் இயல்பதுவாய்
சொல்வாய் கொள்வோம் சோதனை வாழ்வில் சுகப்படவே!

*
கண்ம றைந்திடில் ககனம் இருண்டு கலங்கோமோ,
உண்மை பொய்களை உரைக்கும் விழியால் உணரோமோ,
விண்ந மக்குளே விரியும் வழியும் விழியன்றோ,
புண்ப டும்கணம் முதலில் விழியே பொழியாதோ!

*
மேனி புக்கு வெளியேறிடும் மூச்சுக் காற்றில்
தானி ருக்கும் தனித்தூசுகள் தேக்கும் சுங்கம்!
ஞானி மார்கள் நடுவாக்கிடக் கற்கும் வெப்ப
மானி யான மணமாள்கிற நாசி வாழி!

*
இரண்டு பேசும் உலகை உணர இருகாது
விரிந்த ஞான விளக்கம் அறிய இருகாது
திரண்ட உலகில் இசைக்கே படைத்தான் இருகாது 
இரந்து கேட்போர்க் கீயும் வினைக்கே இருகாது!! 

-விவேக்பாரதி

Comments

Popular Posts