தானமும் தமிழும்
கவிஞர் ருத்ரா ஒரு தானம் மெட்டு வீணையில் மீட்டியதாய் எனக்கு அனுப்பி வைத்தார். அந்த ராகமும் வளைவுகளும் என்னை உடனே பாட வைத்தது. என்ன செய்ய? இசை கேட்டாலே பாடச் சொல்கிறது மனம். அது இறைவனின் லீலை என்கிறது உணர்வு! பலே என்கிறது கேட்டவர்களின் இதழ்...
Rudra! அவர்கள் பதிவு...
ஒரு தானம் மெட்டு விணையில் வாசிக்க முயற்சி செய்திருக்கிறேன் - எப்படி இருக்கு, கேட்டு சொல்லவும் என்று அனுப்பியதுக்கு பதில் 8 நிமிடங்களுக்குள், அவன் பாணியில் அனுப்பினான்...!!!
வாசித்தது ஆடலரசனை நினைத்து, வார்த்தைகளிலும் ஆக்திரமித்திருந்தான் - சிவன் 😍. நெகிழ்ந்து விட்டேன், இன்றைய நிறைவுக்கு ஈடு இணையில்லை....!!🙏
Vivek Bharathi - நன்றி என்று சொன்னாலும் "பராசக்தியின் அருள்" என்ற பதில் தான் வரும், அருளுடன் ஒட்டிக்கொண்டது என் குடுப்பினையும் 🖤🖤
ஓம்!
வந்தோம் நின்றோம்
கண்டோம் தந்தோம்
உனது நினைவில்
உயிர்கள் உருகும்
ஹரசிவனே!
இன்பம் துன்பம்
ரெண்டும்
உனது சந்நிதி தன்னில்
அகலென ஒளிதரும்!
மலம் அகன்றிடும்
மனம் தெளிந்திடும்
நெஞ்சம் எங்கும்
சிவசிவாயெனும்
உனது நாமமே
கேட்கும் கேட்கும்!
விழிகள் உன்முனம்
வழியும் ஆறுகள்
மெழுகென உருகிடுமே
- விவேக் பாரதி
இதோ வீணை மிட்டலும் என் பாடலும்...
Comments
Post a Comment