ஆபத்தைத் தவிர்க்கும் ஆப் - தமிழக காவல்துறைக்கு சபாஷ்

-12.01.2020 கல்கி இதழில் வெளியான கட்டுரை-



ஒரு பட்டனைத் தட்டினால் அரைமணி நேரத்தில் கார் வரும். வீட்டிலிருந்து ஆர்டர் செய்தாலே சாப்பாடு வரும். உள்ளூர்ச் சந்தை முதல் உலகச் சந்தை வரை இருக்கும் எத்தனையோ பொருட்கள் நாம் இருக்கும் இடத்துக்கே வரவைக்க முடியும். இவை எல்லாம் ஸ்மார்ட்போன் ஆளும் இந்த நவீன காலம் நமக்குக் கொடுத்திருப்பவை. இவற்றை யெல்லாம் செய்வது, ஆப் எனப்படும் செயலி. சாப் பாடு வரவழைப்பதிலிருந்து திரைப்படம் பார்ப்பது வரை அனைத்துக்கும் இப்போது செயலிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் மக்களின் வாழ்க்கை எளிமையாகியிருக்கிறது. இன்றைக்கு ஸ்மார்ட்போன் இல்லாத வீட்டையோ, ஆப் தெரியாத குழந்தைகளையோ காண்பது அரிது. 

இந்தத் தொழில்நுட்ப மேம்பாட்டைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறது தமிழகக் காவல்துறை. ‘காவலன் எஸ்.ஓ.எஸ். ஆப்’ மூலம் மக்களின் பிரச்னைகளுக்கு ஒரு விரலைத் தொட்ட மாத்திரத்தில் விரைந்து செல்லும் திட்டத்தைக் காவல்துறையினர் உருவாக்கியுள்ளனர். இரவில் தனியாக நடந்து 
செல்லும்போதோ, வீட்டில் தனியாக இருக்கும் போதோ, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏதேனும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போதோ நம் கையில் இந்தக் காவலன் எஸ்.ஓ.எஸ். ஆப் இருந்தால் போதும், சில நிமிடங்களில் நாம் இருக்கும் இடத்துக் குக் காவல்துறை உதவிக்கு வரும். 

இதுதான் அந்தச் செயலி மூலம் நமக்குக் கிடைக்கும் நம்பிக்கை, உத்தரவாதம். ஆண்டிராய்ட் ப்ளேஸ்டோர், ஆப்பிள் ஆப்ஸ்டோர் ஆகிய இரண் டிலும் இது கிடைக்கிறது. ப்ளேஸ்டோரில் இருக்கும் காவலன் ஆப்பை டவுன்லோடு செய்து, இந்த ஆப்பிற்கு ஆடியோ ரெக்கார்டிங், வீடியோ ரெக் கார்டிங் அவசியம் என்பதால் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும். பயன்படுத்துவோர் வசதிக்காக இதில் தமிழ்/ஆங்கிலம் என இரண்டு மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் மொபைல் எண், பெயர், மாற்று எண் போன்றவற்றைப் பதிவிட்டு, பிறந்த தேதி, பாலினம், வசிக்கும் இடம், பணிபுரியும் இடத்தின் முகவரி, மெயில் ஐ.டி. போன்ற அடிப் படைத் தகவல்களைக் கொடுத்த பின் உங்கள் மொபைலுக்கு Oகூக (Oணஞு கூடிட்ஞு கச்ண்ண்தீணிணூஞீ) எண் வரும். அதைக் கொடுத்துப் பதிவு செய்தால் ‘காவலன் குOகு’ ஆப்பில் உங்கள் கணக்கு ரெடி ஆகிவிடும்.

ஆபத்து சமயத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய மூன்று நபர்களின் மொபைல் எண்களைப் பதிவிடும் வசதியும் அந்த ஆப்பில் இருக்கிறது. அதனால் ஆபத்துக் காலத்தில் நம்மைப் பற்றிய தகவல் கிடைத்தவுடன், அவர்களால் நமக்கு உடனடியாக உதவமுடியும். அதன்பின் உள்ளே நுழைந்ததும் பெரிய வட்டமான பட்டன் இருக்கும். அதுதான் எஸ்.ஓ.எஸ். 

இப்படி இந்த ஆப்பில் SOS பட்டனை அழுத்தி விட்டால் எககு இயங்க ஆரம்பித்துவிடும். இதன் சிறப்பான அம்சமே, இக்கட்டான சூழல் வரும்போது இதிலிருக்கும் பட்டனை அழுத்தினால் தானாகவே அங்கு நடப்பவற்றை நம் போன் படமெடுத்து அனுப்பி விடுவதுதான். 
இந்த ஆப்பை டவுன்லோடு செய்வதன் மூலம் ஆபத்திலிருக்கும் நேரத்தில், அடுத்த சில நிமிடங் களிலேயே சம்பந்தப்பட்டவர்களுக்குக் காவல்துறை யின் பாதுகாப்பு கிடைத்துவிடும் என்பதால் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே இந்த ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்வது நல்லது. 

இந்தச் செயலியால் பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பாக இருக்க முடியும். பெண்கள் எந்த நேரத்திலும் எங்கும் தனியாக அச்சமின்றிச் சென்றுவர முடியும். இந்தச் செயலியை அவசரகால உதவிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என போலிசார் அறிவுரை வழங்குகின்றனர். பதின்மூன்று வயது நிரம்பியவர் மட்டுமே இந்தச் செயலியில் கணக்குத் தொடங்க முடியும் என்பதாக இதன் வடிவமைப்பைச் செய்துள்ளனர். 

இது இணைய வசதி இல்லாத நேரத்திலும் செயல் படும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாம் ’SOS’ பட்டனை அழுத்துவதன் மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குக் குறுஞ்செய்தியாக SMS சென்றுவிடும். காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் சென்ற சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் பகுதிக்குக் காவல் அதிகாரிகள் வந்து நம்மைப் பாதுகாப் பார்கள். ‘காவலன் SOS’  ஆப்பில் இருக்கும் ’SOS’  பட்டனை அழுத்திய உடன் ஜி.பி.எஸ். இயங்க ஆரம்பித்துவிடும் என்ப தால், ‘சும்மா ட்ரையல் செய்து பார்ப்போம்’ என்று ’SOS’ பட்டனை அழுத்திவிடாதீர்கள். தேவையென்றால் மட்டுமே  அழுத்துங்கள்.

தவறுதலாகவோ, தெரியாமலோ க்ளிக் செய்தாலும்கூட, தேவையில்லாமல் காவல்துறையின் நேரத்தை வீணாக்குவதுபோல் ஆகிவிடும் என்பதால் இந்த ஆப்பைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பது அவசியம். இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகிறார்கள். 

நீங்கள் செய்துவீட்டீர்களா?



Comments

Popular Posts