சந்யாசமா? சம்சாரமா?


சரக்க போட்டு நடக்குறப்ப 
சச்சிதானந்தம் 
கஞ்சா பொகைய இழுக்குறப்ப 
காணாம் போகும் இன்பம் 
பொம்பள சோக்கு கேட்குறப்ப 
போலேநாத் கீதம் 
சந்யாசமா? சம்சாரமா? 
ரெண்டுக்கும் என்ன பேதம்?

தொறக்க சொன்னாண்டா! அம்புட்டும் 
தொறக்க சொன்னாண்டா 
ஆட கூட தொறந்துப்புட்டேன் 
அம்புட்டுதாண்டா! 

போதத்துல பேதமில்ல கீத சொன்னது 
போகத்திலும் பேதமில்ல நானும் கண்டது 
போதையில நானெழக்க ஞானம் வந்தது 
போகும் முன்னே சொல்லித் தரேன் கேளு நல்லது! 

ஒருத்தனுக்கு ஒருத்தியின்னு யாரு சொன்னது?
முருகன் பக்கம் கிஸ்னன் பக்கம் ரெண்டு நிக்குது 
பொறப்பு வரும் எறப்பு வரும் பொதுவில் விட்டுடு 
போற வரைக்கும் வாழ்க்க உன்து இன்பம் தொட்டுடு 

ஒடம்ப வளர்க்க உசுர் வளரும் ஒருத்தன் சொன்னாண்டா 
ஒடம்பு வெறும் சாம்பலுன்னு இன்னொருத்தன் நின்னாண்டா 
ஒடம்பெதுக்கு உசிரெதுக்கு தெரியவில்லடா 
உண்மையெல்லாம் தேவயில்ல உணர்ச்சி போதும்டா! 

விவேக்பாரதி 
03-11-2021

Comments

Post a Comment

Popular Posts